தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு: அமைச்சர் தங்கம் தென்னரசு


தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு: அமைச்சர் தங்கம் தென்னரசு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 31 Oct 2023 3:12 PM GMT (Updated: 31 Oct 2023 3:13 PM GMT)

தமிழக அமைச்சரவை கூட்டம் முடிந்தபின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், அமைச்சரவை கூட்டம் முடிந்தபின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளது. புதிய தொழில் நிறுவனங்களுக்கான தொகுப்பு சதவீத சலுகை வழங்குவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தொழில் வளர்ச்சிக்கு சிறந்த துறைமுக கட்டமைப்பு அவசியம் என்பதால், தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டு கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி,கோவை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ரூ.7 ஆயிரம் கோடி முதலீட்டின் மூலம் 22,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சி, மின் வாகனம் உள்ளிட்ட தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வரவுள்ளது. திருச்சி, சேலம் மாவட்டங்களில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு நிலம் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. " இவ்வாறு அவர் கூறினார்.


Next Story