"தனித்து போட்டியிட முடியுமா?" - பாஜகவுக்கு சீமான் கிடுக்குப்பிடி கேள்வி


தனித்து போட்டியிட முடியுமா? - பாஜகவுக்கு சீமான் கிடுக்குப்பிடி கேள்வி
x

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

திருச்சி,

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்று பேசி வரும் பாஜக, வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி இன்றி தனித்து போட்டியிட வேண்டும் என்று நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மனசாட்சி உசுப்பியதால், பாஜக குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கருத்து கூறியதாக தெரிவித்தார். அவரின் கருத்தை தாம் மதிப்பதாகவும் சீமான் தெரிவித்தார்.


Next Story