முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்கு எதிரான வழக்கு... சென்னை ஐகோர்ட்டு அதிரடி


முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்கு எதிரான வழக்கு... சென்னை ஐகோர்ட்டு அதிரடி
x

விசாரணையை விரைந்து முடித்து 3 மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்த‌து.

சென்னை,

சாத்தூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கில், மூன்று மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு பட்டாசு ஆலையை மிரட்டி எழுதி வாங்கியது தொடர்பாக, 6 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய சிவகாசி காவல் உதவி ஆய்வாளர் முத்து மாரியப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

ஆனால், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், விசாரணையை விரைந்து முடித்து 3 மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.


Next Story