நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு; இயக்குனர் கவுதமன் மீண்டும் ஆஜராக கோர்ட்டு உத்தரவு


நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு; இயக்குனர் கவுதமன் மீண்டும் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
x

இயக்குனர் கவுதமன் அக்டோபர் 10-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு 'நீட்' தேர்வு காரணமாக மருத்துவம் படிக்க முடியாத நிலையில், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் குழுமூர் கிராமத்திற்கு வந்து 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் குழுமூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குனர் கவுதமன் உள்பட பல்வேறு அமைப்புகள் மீது, போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தற்போது செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணைக்காக இயக்குனர் கவுதமன் இன்று கோர்ட்டில் ஆஜரானார். இந்த நிலையில், இயக்குனர் கவுதமன் வரும் அக்டோபர் 10-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story