வீரியம் எடுக்கும் காவிரி விவகாரம்... தமிழக எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம்
காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து கன்னட அம்மைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகா,
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு கர்நாடகாவில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள ஓசூருக்கு அருகே அத்திப்பள்ளி எனும் இடத்தில் கன்னட ரக்சன வேதிக்கே அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் காவிரி மேலாண்மை ஆணைய வடிவில் செய்யப்பட்ட உருவ பொம்மையை எரித்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் தமிழக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்றனர். பின்னர் அங்கு வந்த அத்திப்பள்ளி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story