உணவு-சிற்றுண்டி கடைகள், கலை நிகழ்ச்சிகளுடன் பெசன்ட் நகர் எலியட்ஸ் சாலையில் 'சென்னை தினம்' கொண்டாட்டம்


உணவு-சிற்றுண்டி கடைகள், கலை நிகழ்ச்சிகளுடன் பெசன்ட் நகர் எலியட்ஸ் சாலையில் சென்னை தினம் கொண்டாட்டம்
x

உணவு-சிற்றுண்டி கடைகள், கலை நிகழ்ச்சிகளுடன் பெசன்ட் நகர் எலியட்ஸ் சாலையில் ‘சென்னை தினம்' கொண்டாட்டம் சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

சென்னை

1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி மெட்ராசாக உருவான நம்முடைய சென்னையை கொண்டாடும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி, இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து 'சென்னை தினம்' கொண்டாட்ட நிகழ்ச்சியை சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் சாலையில் இன்று(சனிக்கிழமை) மற்றும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் நடத்த உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொண்டு வரும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவையும், உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் செல்போனில் புகைப்படங்கள் எடுக்கும் வகையில், முக்கிய பூங்காக்களில் செல்பி பூத்துகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

சிங்கார சென்னையாக வளர்ந்து, எல்லோருடைய மனதிலும் ஒரு உணர்வுப்பூர்வமான இடத்தை அடைந்திருக்கும் நம் சென்னையை கொண்டாட பொதுமக்கள் அனைவரும் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை சாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story