தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தென்காசி மாவட்டத்தில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
தென்காசி நகர தி.மு.க. சார்பில், தென்காசி சுவாமி சன்னதி பஜார் பகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நகர செயலாளரும் நகர்மன்ற தலைவருமான சாதிர் தலைமை தாங்கினார். நகர்மன்ற துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா முன்னிலை வகித்தார். நகர நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் பஸ்நிலையம் முன்பு தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, இளைஞர் அணி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையம் யூனியன் சேர்வைகாரன்பட்டி பஞ்சாயத்தில் பணியாற்றும் தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு பஞ்சாயத்து தலைவரும், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான ரவிச்சந்திரன் இனிப்பு வழங்கினார்.
கடையம் பஸ்நிலையத்தில் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.