பூந்தமல்லி சிறையில் 2 கைதிகளிடம் செல்போன் பறிமுதல்


பூந்தமல்லி சிறையில் 2 கைதிகளிடம் செல்போன் பறிமுதல்
x

பூந்தமல்லி சிறையில் 2 கைதிகளிடம் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை

பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 22). எண்ணூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (23). இவர்கள் இருவரும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று பூந்தமல்லி தனி கிளை சிறை சூப்பிரண்டு முத்துராமன் சிறையில் கைதிகள் இருக்கும் அறையை திடீரென ஆய்வு செய்தார். அப்போது பாஸ்கர் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரது அறையில் உள்ள கழிவறைக்குள் பதுக்கி வைத்து இருந்த செல்போன், சார்ஜர், சிம் கார்டு, பேட்டரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து பூந்தமல்லி போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார், சிறையில் உள்ள கைதிகளுக்கு செல்போன் கிடைத்தது எப்படி? அவர்களுக்கு யார் உதவினார்கள்?. சிறையில் இருந்தபடியே கஞ்சா விற்பனை செய்தார்களா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பூந்தமல்லி தனி கிளை சிறையில் இந்த மாதத்தில் மட்டும் தொடர்ந்து 2-வது முறையாக கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story