'மயானங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்' - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்


மயானங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்
x

மயானங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

"உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு, சுடுகாடுகளுக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மயானங்களில் அமர்வதற்கு தேவையான கொட்டகைகள், நிழல் தரும் மரங்கள், பூச்செடிகள் நட்டு பசுமையான மயானங்களாக உருவாக தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

குடிநீர் வசதி காம்பவுண்டு சுவர் போன்றவைகளையும் உருவாக்கி கொடுக்க வேண்டும். மயானங்கள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்று புகார்கள் வருகிறது. எனவே மயானங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்."

இவ்வாறு இறையன்பு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


Next Story