'சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது' - வைகோ


Silanthi River Dam Vaiko
x

சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

சென்னையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என அவர் தெரிவித்தார். மேலும் இது குறித்து வைகோ கூறியதாவது;-

"இடுக்கி அணைக்கு தண்ணீர் கொண்டு போவதற்காகவே இந்த அக்கிரமத்தைச் செய்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு சிலந்தி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டப்போவதாக சொல்கிறார்கள்.

ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்தை வஞ்சிக்கக் கூடாது என்ற முறையில், மத்திய அரசு இந்த அணையை கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது. இதற்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று நீதிமன்றங்களில் ஏற்கனவே மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் நடைபெறும் கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையை உடைத்தே தீருவோம் என்றும், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணையை கட்டுவோம் என்றும் கூறி வருகிறது. முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை தடுத்து விடலாம் என்று கேரள அரசு கருதுகிறது. இது அநியாயமானது, அநீதியானது"

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

1 More update

Next Story