தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.!


தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.!
x
தினத்தந்தி 7 Oct 2023 1:32 PM IST (Updated: 7 Oct 2023 1:50 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் மேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய 13 மாவட்டங்களுக்கு நாளையும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய 15 மாவட்டங்களில் வரும் 10, 11 இல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story