தமிழகத்தின் 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தின் 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 8 Nov 2023 2:13 AM GMT (Updated: 8 Nov 2023 2:29 AM GMT)

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (8.11.2023) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story