உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு - வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்
கத்திரி வெயில் காலத்தில் முதல் 7 நாட்களுக்கு வெப்பம் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் கோடை மழை பெய்ய தற்போதைய நிலவரப்படி வாய்ப்பு இல்லை. உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை மழை வருகின்ற போது வெப்பத்தின் தாக்கம் குறையும். தமிழகத்தில் 6 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். கத்திரி வெயிலை பொறுத்தவரை முதல் ஒரு வாரத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படும்.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் இருக்கும். கால நிலை மாற்றம் மட்டுமே வெப்ப அலைக்கு காரணம் இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் வெப்ப அலை பதிவாகியுள்ளது. உள் மற்றும் வட தமிழகத்தில் கூடுதல் வெப்பம் பதிவாகலாம். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெப்ப அலை அதிகரித்துள்ளது" என்றார்.