13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு


13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 4 Dec 2023 10:42 AM IST (Updated: 4 Dec 2023 12:04 PM IST)
t-max-icont-min-icon

'மிக்ஜம்' புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்துவருகிறது.

சென்னை,

'மிக்ஜம்' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூரில் அதி கனமழையும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழையும் பெய்துவருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்து உள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.


Next Story