சென்னை: சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு


சென்னை: சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
x

சென்னை தண்டையார்பேட்டையில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் யோகராஜ். இவர் இன்று தண்டையார்பேட்டையில் இருந்து புதுவண்ணாரப்பேட்டை பகுதிக்கு செல்வதற்காக தனது தந்தை காரில் சென்றுள்ளார். அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட யோகராஜ் உடனடியாக காரில் இருந்து இறங்கியுள்ளார்.

அதற்குள்ளாக காரில் தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. இதையடுத்து தண்டையார்பேட்டை தீயணைப்புத்துறையினருக்கு யோகராஜ் தகவல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இதில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story