சென்னை வெள்ளம்; ஒவ்வொரு பகுதிக்கும் அமைச்சர்களை நியமித்து பணியாற்றி உள்ளோம் - அமைச்சர் பொன்முடி


சென்னை வெள்ளம்; ஒவ்வொரு பகுதிக்கும் அமைச்சர்களை நியமித்து பணியாற்றி உள்ளோம் - அமைச்சர் பொன்முடி
x

முதல்-அமைச்சரின் முயற்சியால் சென்னை இரண்டே நாட்களில் சரி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

விழுப்புரம்,

மிக்ஜம் புயல் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியால் இரண்டே நாட்களில் சென்னை சரிசெய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"வெள்ளம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் அமைச்சர்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளோம். மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல இடங்களுக்கு நேரில் சென்று பணியாற்றி வருகிறார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

அரசியலுக்காக பேசுபவர்கள் 2015-ல் என்ன செய்தார்கள் என்பதை திரும்பி பார்க்க வேண்டும். இவ்வளவு பெரிய வெள்ளம் இதுவரை வந்தது கிடையாது. 47 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்-அமைச்சரின் முயற்சியால் சென்னை இரண்டே நாட்களில் சரி செய்யப்பட்டுள்ளது."

இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.



Next Story