சென்னை கலாஷேத்ரா விவகாரம்: எழுத்துப்பூர்வமான புகார் வரவில்லை - கூடுதல் கமிஷனர் விளக்கம்


சென்னை கலாஷேத்ரா விவகாரம்: எழுத்துப்பூர்வமான புகார் வரவில்லை - கூடுதல் கமிஷனர் விளக்கம்
x

எழுத்துப்பூர்வமான புகார் அளிக்கப்பட்டால் அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்தார்.

சென்னை,

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் தொடர்பாக சென்னையில் இன்று கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களிடம் இன்று விளக்கமளித்தார். அப்போது அவர், கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் தொல்லை புகார் தொடர்பாக இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் வரவில்லை என்று தெரிவித்தார்.

எழுத்துப்பூர்வமான புகார் அளிக்கப்பட்டால் காவல்துறை அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் காவல்துறை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் கலாஷேத்ரா கல்லூரியில் நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



1 More update

Next Story