சென்னை மெட்ரோ திட்டம் - அறிக்கை சமர்ப்பிப்பு
சென்னை மெட்ரோ திட்டம் - 2 விரிவாக்க பணிகளுக்கான சாத்திய கூறு அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டது.
சென்னை,
சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. மாதவரம்-சிறுசேரி சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்- சோழிங்கநல்லூர் இடையே 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கிறது. சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் தற்போது சுரங்கப்பாதை பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மெட்ரோ திட்டம் - 2 விரிவாக்க பணிகளுக்கான சாத்திய கூறு அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டது. இதன்படி கோயம்பேடு - ஆவடி, சிறுசேரி - கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைப்பதற்க்கான சாத்திய கூறு அறிக்கை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
Related Tags :
Next Story