சென்னை: நள்ளிரவில் தனியாக சாலையில் பரிதவித்த குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு
நள்ளிரவின் போது சாலையில் தனியாக பரிதவித்து கொண்டிருந்த குழந்தையை போலீசில் ஒப்படைத்த மருத்துவரை காவலர்கள் வெகுவாக பராட்டினார்.
சென்னை,
போரூர் ஐயப்பன் தாங்கல் பகுதியில் வசித்து வருபவர் நந்தகுமார். மருத்துவரான இவர் நேற்று பணி முடிந்து திரும்பும் போது பூந்தமல்லி சாலையில் 2 வயது குழந்தை ஒன்று அழுத படி நின்று கொண்டிருந்ததை கண்டுள்ளார்.
அக்குழந்தையை அழைத்து விசாரிகையில், அக்குழந்தையின் பெயர் உமல் என்பதும் பெற்றோருடன் வெளியில் வந்த போது பெற்றோரை தவறவிட்டார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, இரவு நேர பணியில் இருந்த போலீசாரிடம் மருத்துவர் அக்குழந்தையை ஒப்படைத்திருக்கிறார். பின், போலீசார் விசாரிக்கையில், அக்குழந்தையின் பெற்றோர் அர்திக் பாஷா - ஆயிஷா தம்பதியினர் என்பதை கண்டறிந்தனர்.
குடும்பத்துடன் வெளியே ஷாப்பிங் வந்த போது லிப்டில் குழந்தையை பெற்றோர் தவறவிட்டுள்ளனர். இதையடுத்து, ஆவடி காவல் ஆணையர் முன்னிலையில் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சாலையில் பரிதவித்து நின்ற குழந்தையை மீட்டு போலீசில் ஒப்படைத்த மருத்துவரை காவலர்கள் வெகுவாக பாராட்டினர்.