லைவ் அப்டேட்ஸ்: ஓபன் பிரிவில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு பதக்கம் வழங்கினார் முதலமைச்சர்
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்க நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.
சென்னை,
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது.
இந்த நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிறைவு விழாவில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா தொடங்கியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-மந்திரிகளின் புகைப்படம் இடம்பெற்றுள்ளன.
Live Updates
- 9 Aug 2022 9:57 PM IST
ஓபன் பிரிவில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கு பதக்கம் வழங்கினார் முதலமைச்சர்
அர்மேனியா நாட்டுக்கு வெள்ளிப்பதக்கம்
இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது
பெண்கள் அணி சார்பில் கோனெரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியாசச்தேவ், பக்திகுல்கர்னிக்கு வெண்கலம்
- 9 Aug 2022 9:41 PM IST
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
*அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
*செஸ் ஒலிம்பியாட்டிற்கு பின் விளையாட்டுத்துறை முன்பை விட அதிக பாய்ச்சலுடன் செல்லும்.
*சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர், ஆசிய பீச் வாலிபால் தொடர் ஆகியவற்றை சென்னையில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
*சென்னையை மறந்துவிட வேண்டாம்; உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன் - வெளிநாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
*அனைவரும் மெச்சத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் நடந்து முடிந்துள்ளது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 9 Aug 2022 8:22 PM IST
இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் பெருமை அடைகிறேன் - விஸ்வநாதன் ஆனந்த் நெகிழ்ச்சி
சென்னை
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவில் பேசிய விஸ்வநாதன் ஆனந்த், இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் பெருமை அடைகிறேன் என த் தெரிவித்துள்ளார். மேலும், செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்தியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.
- 9 Aug 2022 8:19 PM IST
உலகில் இதுவரை நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடர்களில் தமிழ்நாட்டில்தான் சிறப்பாக நடந்துள்ளது - சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் பேச்சு