தேனியில் தர்ப்பூசணி பழங்களில் வடிவமைக்கப்பட்ட செஸ் போட்டியின் காய்கள்


தேனியில் தர்ப்பூசணி பழங்களில் வடிவமைக்கப்பட்ட செஸ் போட்டியின் காய்கள்
x

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி தேனியில் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

தேனி:

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்க உள்ளதையொட்டி, தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.

இதில் 8 அடி அகலம், 8 அடி நீளத்தில் செஸ் போட்டிக்கான கட்டங்கள் வரையப்பட்டு அதில் போட்டிகளில் நகர்த்தும் காய்கள் தர்ப்பூசணி பழங்களில் வடிவமைக்கப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

இதை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் முரளிதரன் திறந்து வைத்தார். பின்னர், அங்கு விழிப்புணர்வு செஸ் போட்டி நடந்தது.

அதில் மாணவ, மாணவிகளுடன் மாவட்ட கலெக்டர் முரளிதரன் செஸ் விளையாடினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story