ஸ்பெயின் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை வந்தடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஸ்பெயின் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை வந்தடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 7 Feb 2024 8:22 AM IST (Updated: 7 Feb 2024 8:46 AM IST)
t-max-icont-min-icon

ஸ்பெயின் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார்.

சென்னை,

பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். கடந்த மாதம் ஜனவரி 27-ந் தேதி ஸ்பெயின் புறப்பட்டுச் சென்ற அவர் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான மிகவும் சாதகமான சூழ்நிலைகளைப் பற்றி அவர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார். அதன் மூலம் சில நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

இந்த நிலையில் 10 நாட்கள் ஸ்பெயின் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.


Next Story