பிரதமரிடம் 13 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் மோடியிடம் 13 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்தார்.
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய கோரிக்கை மனு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதன் விவரங்கள் வருமாறு:
1. திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை : சென்னை மெட்ரோ இரயில் திட்டம்-கட்டம்-2
2. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை
1. விமான நிலைய விரிவாக்கத்திற்கான பாதுகாப்புத்துறை நிலங்களை இலவசமாக வழங்குதல்
2.காலணி உற்பத்திக்கான புதிய உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகை திட்டம் (PL)
3. பி.எம். மித்ரா பூங்காவின் முதன்மை மேம்பாட்டாளராக
3. சிப்காட்டினை நியமித்தல் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
(அ)தமிழ்நாட்டில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தை அமைத்தல்
(ஆ) ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துதல்
(இ) தமிழ்நாட்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகளை நடத்துதல்
4. போக்குவரத்து துறை
இராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை புதிய அகல இரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடுதல்
5. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதிபட்டியலில் 'ன் (N)' , ' க(GA)' .'ட(DA)', "க(KA)' என முடிவடையும் பெயர்களை " ர் R" என மாற்ற கோருதல்.
6. எரிசக்தி
தமிழ்நாடு கடற்கரையில் கடலோர காற்றாலைகள்
7. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)
சுங்க கட்டணம் வசூலிப்பதில் உள்ள முரண்பாடுகள்.
8. கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
பாக்வளைகுடா பகுதிகளில் மீனவர்களின்பாரம்பரிய மீன் பிடி உரிமைகளைபாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்தல்
9. இலங்கைத் தமிழர்கள் விவகாரம் ஈழத் தமிழர்களுக்கு சமமான குடிமுறை மற்றும் அரசியல் உரிமைகள்அளிப்பது - தொடர்பாக.
1. திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள்
ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் 50:50 என்ற சதவீதப் பங்களிப்பு அடிப்படையில் ஒப்புதல்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் - கட்டம்-II ஐ. கட்டம் -I ஐ செயல்படுத்தியதைப் போல் ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் 50:50 என்ற சமவீதப் பங்களிப்புடன்
செயல்படுத்துவதற்கான ஒப்புதலை விரைவில் வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
2. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை
1. விமான நிலைய விரிவாக்கத்திற்கான பாதுகாப்புத்துறை நிலங்களை இலவசமாக வழங்குதல்
இந்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் பாதுகாப்புத்துறை நிலங்கள் ஆகியவற்றை விமான நிலைய செயல்பாட்டிற்காக
இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். விமான நிலைய விரிவாக்கம் / நவீனமயமாக்கல் பணிகளுக்கு தேவைப்படும் பாதுகாப்புத்துறை நிலங்களின் முக்கியத்துவம் மற்றும் அவசர தேவையை கருத்தில் கொண்டு இந்நேர்விற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு அவசர தீர்வுகாண வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
2. காலணி உற்பத்திக்கான புதிய உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகை திட்டம் (PLI)
தோல் மற்றும் தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான விரிவான உற்பத்தி சார்ந்த ஊக்கச்சலுகை திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்த வேண்டப்படுகிறது. இது தற்போதுள்ள உற்பத்தியாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதோடு, காலணி ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் உகந்த இடமாக இந்தியாவை உருவாக்கும். மேலும், உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகைத் திட்டம், ஆபரணங்கள், ஜிப்பர்கள், காலணியின் அடிப்பகுதிகள், கொக்கிகள் மற்றும் அலங்கார பொருட்கள் போன்ற உள்ளீட்டுப் பொருட்களுக்கான இறக்குமதி மாற்றீடு செய்ய உதவும். எனவே, காலணி உற்பத்திக்கான புதிய உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகை திட்டத்தை செயல்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.
3. பி.எம். மித்ரா பூங்காவின் முதன்மை மேம்பாட்டாளராக சிப்காட்டினை நியமித்தல்,
சிப்காட் தன்னகத்தே நிலத்தின் உரிமையினை வைத்துள்ளதாலும், தொழிற்பூங்காக்களை நிர்வகிப்பதில் தனது செயல்திறனை நிரூபித்ததாலும், சிப்காட் -ஐ தமிழ்நாட்டில் உள்ள பி.எம். மித்ரா பூங்காவினை நிர்வகிக்க ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு நிர்வகிக்க அனுமதிக்கப்படுவது திட்ட வழிகாட்டியிலும் ஏற்கனவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
தமிழ்நாட்டில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தை அமைத்தல்
சென்னையிலுள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக (TNPESU) வளாகத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தை நிறுவுவதற்கான கருத்துரு ஏற்கனவே உள்ளது. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் அமையவுள்ள இந்த மண்டல மையம், சிறந்து விளங்கும் விளையாட்டு கல்வியுடன் கைகோர்த்து செல்லும் ஒரு முன்மாதிரி மையமாக அமையும். எனவே, அங்கு இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தை அமைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
(ஆ) ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துதல்
ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிய கடற்கரை விளையாட்டு, பல்வகை விளையாட்டு நிகழ்வுகளுள் மூன்றாவது பெரிய ஆசிய பல்வகை-விளையாட்டு நிகழ்வு ஆகும். ஐந்து நாடுகள் (இந்தோனேசியா, ஓமன், சீனா, தாய்லாந்து மற்றும் வியட்நாம்) மட்டுமே ஆசிய கடற்கரை விளையாட்டுகளை நடத்தியுள்ளது. மேலும், நாற்பத்தைந்து நாடுகள் இந்த விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியை இந்தியா இதுவரை நடத்தியதில்லை. தமிழ்நாடு 1076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மொத்த கடற்கரை நீளத்தில் 15% ஆகும். கடற்கரை கைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ள தமிழ்நாடு, 2022 இல் சென்னையில் தேசிய விளையாட்டுப் போட்டியையும் நடத்தியது. இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக தமிழ்நாட்டில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்திட அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
(இ) தமிழ்நாட்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகளை நடத்துதல்
சர்வதேச பல்வகை விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான தமிழ்நாட்டின் தொலைநோக்குப் பார்வையைக் கருத்தில் கொண்டு. அடுத்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு தனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.