கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று மாலை சந்திக்கிறார் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் இருவரும் அமர்ந்து பேசலாமே என சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது.
சென்னை,
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் இருவரும் அமர்ந்து பேசலாமே என சுப்ரீம் கோர்ட்டு யோசனை கூறியிருந்தது.
இந்த நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 5.30 மணிக்கு கவர்னரை சந்திக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கிடப்பில் போடப்பட்டுள்ள 10 மசோதாக்கள் தொடர்பாக பேச உள்ளார்.
அத்துடன், ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதால், கவர்னருக்கு அழைப்பு விடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story