முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாமக்கல் வருகை


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாமக்கல் வருகை
x

மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கரூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

நாமக்கல்,

நாமக்கல்லில் உள்ள பொம்மைகுட்டை மேட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் மாநாடு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இதில் தமிழகம் முழுவதும் இருந்து மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலையில் கரூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். இவ்விழா நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம் 12 மணி அளவில் நாமக்கல் மாவட்ட நுழைவு பகுதியான பரமத்திவேலூர் காவிரி பாலம் வழியாக நாமக்கல்லுக்கு செல்கிறார்.

பின்னர் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். இதையடுத்து நாளை காலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.


Next Story