முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகை


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகை
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகிறார்.

திருச்சி

முதல்-அமைச்சர் வருகை

தஞ்சை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அவர், இன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார். பின்னர் இங்கிருந்து கார் மூலம் அவர் தஞ்சை செல்கிறார். தஞ்சாவூரில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை 6.30 மணியளவில் புறப்பட்டு திருச்சிக்கு வரும் முதல்-அமைச்சர், இங்கிருந்து விமான மூலம் சென்னை செல்கிறார்.

டிரோன்கள் பறக்க தடை

முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு காரணம் கருதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு சென்று விட்டு மீண்டும் திருச்சிக்கு அவர் பயணம் செய்யும் சாலைகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் அறிக்கை

இந்தநிலையில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கைகளில், திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தரும் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டானுக்கு வரவேற்பு அளிக்க திருச்சி தெற்கு, மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக விமான நிலையத்திற்கு வரும்படி கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளனர்.


Next Story