'சென்னையின் சொந்த பையன்' அஸ்வினுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 9-வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.
சென்னை,
இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 9-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜாக் கிராலியின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இது அவரது 500-வது விக்கெட்டாக பதிவானது. இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,'சாதனைகளை முறியடித்து கனவுகளை உருவாக்குவது, சென்னையின் சொந்த பையன், அஸ்வின்!
ஒவ்வொரு திருப்பத்திலும், அவர் உறுதிப்பாடு மற்றும் திறமையை வெளிப்படுத்துகிறார். இது ஒரு உண்மையான மைல்கல்லை குறிக்கிறது!
கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை சிறப்பாக பெற்ற அஸ்வினின் மாயாஜால சுழலுக்கு வாழ்த்துகள்.
எங்கள் சொந்த ஜாம்பவானுக்கு அதிக விக்கெட்டுகள் மற்றும் வெற்றிகள் இதோ!' என பதிவிட்டுள்ளார்.