'நாங்கள் கேட்கும் கேள்விக்கு முதல்-அமைச்சர் பதிலளிக்க வேண்டும்' - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை


நாங்கள் கேட்கும் கேள்விக்கு முதல்-அமைச்சர் பதிலளிக்க வேண்டும் - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை
x

தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து பொதுகூட்டத்தில் பதில் தெரிவிக்கப்படும் என அண்ணாமலை கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்தடைந்தார். மராட்டிய மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவரை மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் பல்வேறு பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து வாகனம் மூலம் கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்குச் சென்ற அமித்ஷாவை, அரசியல் சாராத பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் நேரில் சென்று சந்தித்தனர். அதில் இயக்குனர் சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி, இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், விளையாட்டு வீரர் பாஸ்கரன் என சுமார் 20-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் அமித்ஷாவை சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின் போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உடன் இருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, "பா.ஜ.க.வின் 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து இன்றைய பொதுகூட்டத்தில் பதில் தெரிவிக்கப்படும். அதேப்போல், நாங்கள் கேட்கும் கேள்விக்கும் முதல்-அமைச்சர் பதிலளிக்க வேண்டும்"என்று தெரிவித்தார்.



Next Story