'கல்லூரி கனவு' நிகழ்ச்சி தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்


கல்லூரி கனவு நிகழ்ச்சி தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
x

‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களுடன் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

'நான் முதல்வன்' திட்டத்தின் ஒரு பகுதியாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில், 'கல்லூரி கனவு' என்ற நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை மாவட்டம் தோறும் நடத்தும் விதமாகவும், நடத்தும் இடம் நிகழ்வுகள் தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களுடன் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், எந்தெந்த தலைப்பில் எவ்வளவு நேரம் வல்லுனர்கள் பேச வேண்டும், நிகழ்விடம் குறித்து விளம்பரப்படுத்துதல், மாணவர்களை நிகழ்விடத்திற்கு அழைத்து வருதல், கையேடு விநியோகம், நிகழ்ச்சியை தொடங்குவது மற்றும் நடத்துவது உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதில் மாவட்ட கலெக்டர்கள் ஆர்வத்துடன் செயல்பட்டு வெற்றியடைய வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story