"சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகள்: பின்னால் இருப்பது யார்?" - இயக்குனர் பார்த்திபன் ஆவேசம்


சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகள்: பின்னால் இருப்பது யார்? - இயக்குனர் பார்த்திபன் ஆவேசம்
x

சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தை இயக்குனர் பார்த்திபன் பார்வையிட்டார்.

சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தை இயக்குனர் பார்த்திபன் இன்று பார்வையிட்டார். இதனை தொடர்ந்து இயக்குனர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

காவல்துறை நண்பன் என்று எழுதி வைக்கிறோமே தவிர, அதனை எவ்வளவு பேர் மதிக்கிறார்கள். காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அதன் மூலம் நமக்கான சந்தோஷம், பாதுகாப்பு கிடைக்கும்.

மேலும், சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை, பின்னால் இருந்து இயக்கும் முகம் யார் என்பதை கண்டறிந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


1 More update

Next Story