அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த நாரவாரிகுப்பம், புழல் ஏரிக்கரை பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, சுகாதார வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, மழைநீர் வடிகால்வாய், இலவச வீடுகள் என எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என தெரிகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் இப்பகுதியில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு கண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story