அரியலூரில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்


அரியலூரில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
x

அரியலூரில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. சார்பில் நேற்று அண்ணா சிலை அருகே மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரைசாமி, மாவட்ட துணைத்தலைவர் சிற்றம்பலம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விரிவாக எடுத்துக்கூறினர். ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்களை அழைத்து பேசி தீபாவளி பண்டிகை கால போனசாக 20 சதவீதம் அளித்திட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.


Next Story