சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம்
x

சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் தமிழ்நாடு தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் என பாகுபடுத்தி பேசுவது, நிறுவனங்களுக்கு ஆதரவாக பேசுவது, தொழிற்சங்க உரிமைகளை நசுக்குவது உள்ளிட்டவற்றை கண்டிக்கும் விதமாகவும், தமிழக அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு தொழில் உறவை பேண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன், தனபால் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story