காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: அனைத்து கட்சி எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல் அமைச்சர் ஸ்டாலின் அழைப்பு


காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: அனைத்து கட்சி  எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல் அமைச்சர் ஸ்டாலின் அழைப்பு
x
தினத்தந்தி 22 Aug 2023 11:09 AM GMT (Updated: 22 Aug 2023 12:27 PM GMT)

காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்க அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை வரும் 25-ந்தேதி நாகை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்க அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக வரலாற்றில் பொன்னேட்டில் பதிவு செய்யப்பட இருக்கும் இந்த திட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க., பா.ம.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதிகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி வைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.


Next Story