கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணை தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கால அவகாசம் இல்லாமல் புள்ளி விவரங்கள் கோருதல் கூடாது. தினசரி காணொலி ஆய்வுக் கூட்டங்கள் நடத்த கூடாது. விடுமுறை நாட்களில் கூட ஓய்வு இல்லாமல் வாட்ஸ் அப் செயலி மூலம் கடித போக்குவரத்து மற்றும் நிர்வாகம் நடத்துதல் கூடாது. அனைத்து பணி நிலை பதவி உயர்வு முன்மொழிவுகள் இதுவரை கோராமல் தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். துணை பதிவாளர் பதவி உயர்வில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேல் பால் தணிக்கை துறையில் பணிபுரிவோரை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசையும், கூட்டுறவு துறையையும் வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.