பொதட்டூர்பேட்டையில் கல்லூரி காவலாளி கொலை - வாலிபர் கைது


பொதட்டூர்பேட்டையில் கல்லூரி காவலாளி கொலை - வாலிபர் கைது
x

பொதட்டூர்பேட்டையில் தனியார் கல்லூரி காவலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டையில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பொதட்டூர்பேட்டை தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்த மராட்டிய சுப்பிரமணி (வயது 55) என்பவர் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலர் கல்லூரியின் பின்புறம் மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவர்களை கவனித்த இரவு காவலாளி மராட்டி சுப்பிரமணி அவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறினார். ஆனால் அவர்கள் செல்ல மறுத்ததுடன் தொடர்ந்து அதே இடத்தில் மது குடித்து கொண்டிருந்தனர். இதனால் மராட்டிய சுப்பிரமணிக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அவர்களில் ஒரு வாலிபர் மராட்டிய சுப்பிரமணியத்தை கைகளால் தாக்கியதாக தெரிகிறது. இதில் மராட்டிய சுப்பிரமணி அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடி விட்டனர்.

தகவல் கிடைத்ததும் அவரது உறவினர்கள் அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுப்பிரமணியை தாக்கி கீழே தள்ளிய பொதட்டூர்பேட்டை சிலம்பு பாளையம் தெருவை சேர்ந்த வாசு என்பவரது மகன் நவீன் குமார் (21) என்பவரை கைது செய்து திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருத்தணி சிறையில் அடைத்தனர்.


Next Story