குடும்ப தகராறில் இருதரப்பினர் மோதல்; பெண் உள்பட 5 பேர் கைது


குடும்ப தகராறில் இருதரப்பினர் மோதல்; பெண் உள்பட 5 பேர் கைது
x

குடும்ப தகராறில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

திருச்சி அரியமங்கலம் அருகே ஆயில் மில் ரோடு அண்ணா நகரை சேர்ந்தவர் லத்தீப்(வயது 45). இவரது மனைவி பைரோஷ்பேகம்(40). இவர்களுக்கு 2 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். லத்தீப் வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் லத்தீப் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை வீட்டில் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் பைரோஷ் பேகம் புகார் அளித்தார். இந்த நிலையில் மீண்டும் நேற்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது லத்தீப் மற்றும் வடக்கு காட்டூரை சேர்ந்த அவரது அக்காள் மகன் சதாம் உசேன் (26) ஆகியோர் சேர்ந்து பைரோஸ் பேகத்தை தாக்கியுள்ளனர். பதிலுக்கு பைரோஷ் பேகம், அவரது அண்ணன் அரியமங்கலம் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்த காதர் மொய்தின்(40), அவரது தம்பி உக்கடை பகுதியை சேர்ந்த ஜாபர் அலி(25) ஆகிய 3 பேரும் சேர்ந்து லத்தீப்பை தாக்கியுள்ளனர். இது குறித்து லத்தீப் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் திருவானந்தத்திடம் அளித்த புகாரின் பேரில் பைரோஷ் பேகம், காதர் மொய்தீன், ஜாபர் அலி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் பைரோஷ் பேகம் அளித்த புகாரின்பேரில் லத்தீப், சதாம் உசேன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story