காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்


காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

பெண்ணாடம்,

சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை கண்டித்து பெண்ணாடம் பழைய பஸ் நிலையம் அருகே விருத்தாசலம்-திட்டக்குடி நெடுஞ்சாலையில் நகர தலைவர் கந்தசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட நகர தலைவர் கந்தசாமி, இறையூரை சேர்ந்த எஸ்மா கந்தசாமி, துறையூர் தர்மலிங்கம், ஓ.கீரனூர் முருகேசன், பொன்னேரி அன்பழகன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

சிதம்பரம்

சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள தபால் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நகர மன்ற உறுப்பினருமான தில்லை ஆர்.மக்கின் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராஜா சம்பத் குமார் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட துணை தலைவர் ஆர்.சம்மந்தமூர்த்தி, நகர காங்கிரஸ் செயல் தலைவர் தில்லை கோ.குமார், வட்டார தலைவர் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ. நூர்அலி, குமராட்சி ரங்கநாதன், கீரப்பாளையம் வெள்ளை என்ற பார்த்திபன், மாவட்ட துணை தலைவர்கள் ஜி.கே குமார், வி.சண்முகசுந்தரம், குமராட்சி வட்டார தலைவர் பகவத்சிங் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். முடிவில் மாவட்ட செயலாளர் ஆர்.வி சின்ராஜ் நன்றி கூறினார்.

காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோவில் கச்சேரி ரோட்டில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினரும், ஒன்றிய குழு உறுப்பினருமான மணிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் ஆசிரியர் ராமன், மகளிர் அணி தலைவர் கரோலின் அண்ணாதுரை, வட்டார தலைவர்கள் கண்ணன், திருவரசமூர்த்தி, நகர தலைவர்கள் அன்வர், இதயத்துல்ல ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் இளைய அன்பழகன், பாண்டியன், அண்ணாதுரை, பஷீர், சலாம், தெம்மூர் செல்வம், தம்பியாபிள்ளை, கிருபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.


Next Story