காஞ்சீபுரம் மாவட்டம் வளையக்கரணை ஊராட்சியில், அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணி தொடக்கம்


காஞ்சீபுரம் மாவட்டம் வளையக்கரணை ஊராட்சியில், அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணி தொடக்கம்
x

காஞ்சீபுரம் மாவட்டம் வளையக்கரணை ஊராட்சியில் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள வளையக்கரணை ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாமல் இருந்து வந்தது. கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி தர பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழுவினர், வளையக்கரணை ஊராட்சி மன்ற தலைவர் அ.ராஜனிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர் எக்ஸ்னோரா, ரொனால்ட் நிசான் தொழிற்சாலை பங்களிப்புடன் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் வளையக்கரணை ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது

விழாவுக்கு வளையக்கரணை ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த மோகனசுந்தரம், ரொனால்ட் நிசான் அதிகாரி யுவராணி ஆகியோர் கலந்து கொண்டு கூடுதல் வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி வைத்தனர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காசி, பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர். பெற்றோர்கள், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story