சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஆலோசனைக் கூட்டம் - அதிகாரிகள், தீட்சிதர்கள் பங்கேற்பு


சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஆலோசனைக் கூட்டம் - அதிகாரிகள், தீட்சிதர்கள் பங்கேற்பு
x

கனகசபை மீது பக்தர்கள் ஏற தடை விதிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

கடலூர்,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி வரும் 26-ந்தேதி தேரோட்டமும், 27-ந்தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது திருவிழாவிற்காக ஒவ்வொரு துறை சார்பிலும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. கனகசபை மீது பக்தர்கள் ஏற தடை விதிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர். இது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


1 More update

Next Story