சென்னையில் நாளை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்


சென்னையில் நாளை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
x

ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அண்மையில் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளைய தினம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது, கூட்டணி அமைப்பது உள்ளிட்டவை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



Next Story