நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்


நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில அமைப்பு செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சக்திவேல், துணைப்பொதுச் செயலாளர் கல்யாண சுந்தரம், செயற்குழு உறுப்பினர் கந்தநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் செல்வராஜ், மாநில தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை மத்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளை திறந்து ஏழை, எளிய மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும், பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் குமார், தலைமை நிலைய செயலாளர் செங்கான், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் காமராஜ், கோவிந்தசாமி, கோவிந்தராஜ் தவமணி, பூசமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில துணைத்தலைவர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.


Next Story