சர்ச்சை பேச்சு: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு!


சர்ச்சை பேச்சு: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு!
x

தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் 3 நாட்கள் பிரசாரம் செய்தார்.

அவர் கடந்த 13-ந் தேதி ஈரோடு திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது குறிப்பிட்ட சமுதாய மக்கள் பற்றி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. சீமானின் பேச்சுக்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்ட சமுகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டியலின அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கருங்கல்பாளையம் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகாவிற்கு ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


Next Story