கொரோனா பரவல் அதிகரிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story