அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப்பதிவு


அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப்பதிவு
x

கோப்புப்படம்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

சென்னை மாநகராட்சியில் கடந்த 2018ம் ஆண்டு விதிகளை மீறி டெண்டர் ஒதுக்கியதாக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மழைநீர் வடிகால் வாரியம், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக ரூ.26.61 கோடி டெண்டர் முறைகேடு செய்தாக அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

1 More update

Next Story