'அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது' - எடப்பாடி பழனிசாமி பேச்சு


அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது - எடப்பாடி பழனிசாமி பேச்சு
x

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 90 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மதுரை,

மதுரை வலையங்குளத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சியில் இணைந்தவர்களை வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தி.மு.க.வின் ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக குற்றம் சாட்டினார். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 90 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அ.தி.மு.க. முலம் விலாசம் கிடைத்த 8 பேர் இன்று தி.மு.க.வில் அமைச்சர்களாக இருக்கின்றனர் என்று குறிப்பிட்ட அவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தான் இன்று தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர் என்று கூறினார்.


Next Story