ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி


ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி
x

ஹரீஷை 4 நாட்களும், மாலதியை ஒரு நாளும் காவல் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை,

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீட்டாளர்களிடம் முதலீடாக பெற்ற 2,438 கோடி ரூபாயை மோசடி செய்ததாக பொளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா, மைக்கேல் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் இயக்குனர்களான ஹரீஷ் மற்றும் மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் ஹரீஷ் மற்றும் மாலதியை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்து நீதிபதி கருணாநிதி, ஹரீஷை 4 நாட்களும், மாலதியை ஒரு நாளும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.



Next Story