கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை


கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 7 May 2024 10:54 AM IST (Updated: 7 May 2024 12:40 PM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மே மாதம் 7-ந் தேதி (இன்றைய நாள்) முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் புதிய அமைச்சரவையும் பொறுப்பு ஏற்றுக்கொண்டது.

அதன்பின்னர், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த வாக்குறுதிகள் நிறைவேற்றும் பணி தொடங்கியது. அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது, 1 கோடியே 15 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று இன்று (செவ்வாய்க்கிழமை) 4-ம் ஆண்டு தொடங்குவதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கும், தலைமைச் செயலகத்துக்கும் செல்ல இருக்கிறார். அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள், தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இருக்கின்றனர்.


Next Story