பிரதமர் மோடியின் தியானத்தை விமர்சிப்பதா? தமிழக பா.ஜனதா கண்டனம்
பிரதமர் மோடியை வீழ்த்த முயன்று தோற்று தோற்று போனவர்கள், தோற்று போகப் போகிறவர்கள், பிரதமர் மோடி நடந்தால், நின்றால், அமர்ந்தால் குற்றம் என்கிறார்கள் என்று தமிழக பா.ஜனதா சாடியுள்ளது.
சென்னை,
பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆன்மிகம், தியானம், யோகா, பிரார்த்தனை, சூரிய வழிபாடு ஆகிய நம் பாரதிய கலாசாரத்தின் மீது முற்றிலும் நம்பிக்கை இல்லாத, கூட்டம் பிரதமர் மோடியின் தியானத்தை எதிர்க்கிறது. பிரதமர் மோடியை வீழ்த்த முயன்று தோற்று தோற்று போனவர்கள், தோற்று போகப் போகிறவர்கள், பிரதமர் மோடி நடந்தால், நின்றால், அமர்ந்தால் குற்றம் என்கிறார்கள்.
இப்படி அமர்ந்து தியானம் செய்யக் கூடாது, அப்படி அமரக்கூடாது என்றெல்லாம் விமர்சித்து வருகிறார். இந்த புலம்பல்களை, வெற்று கூச்சல்கள். 4-ந்தேதி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இறைவன் அருளோடு மக்கள் ஆதரவோடு அவர் பெற இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story