"அன்புமணி ராமதாஸ் எம்.பி ஆனதே அதிமுகவால் தான்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


அன்புமணி ராமதாஸ் எம்.பி ஆனதே அதிமுகவால் தான் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
x

அன்புமணி எம்.பி ஆனதே அதிமுகவால் தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக 4 பிரிவுகளாக உள்ளது என அன்புமணி ராமதாஸ் கூறியது ஒரு பக்கம் வருத்தமும், வேதனையாக உள்ளது. மறுபக்கம் பாமக தலைவர் அன்புமணியின் பேச்சு கண்டனத்திற்குரியது.

அன்புமணி ராமதாஸ் ஏறி வந்த ஏணியை மறக்கலாமா? அன்புமணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கீகாரம் யார் கொடுத்தது அதிமுக தான். அன்புமணி ராமதாஸ் எம்.பி ஆனதே அதிமுகவால் தான். அதிமுகவை சிறுமைப்படுத்தும் செயலை அன்புமணி செய்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும். அதிமுக செய்ததை அன்புமணி நினைத்து பார்கணும், நன்றி மறந்த பாமக.

இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றி தர வேண்டும். வாக்குறுதி கொடுத்த திமுக அதை நிறைவேற்றி தர வேண்டும். இது தொடர்பாக முதல்-அமைச்சர் அமைத்துள்ள குழு கண் துடைப்பு குழு. இது விடியா அரசு. இந்த ஆட்சியில் மோசமான நிர்வாகம் நடக்கிறது.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை. அந்த பதவிகள் காலாவதியாகிவிட்டது. போலியான அரசியல் செய்வது தான் ஒ.பன்னீர் செல்வம் வாடிக்கை. ஒபிஎஸ் குருப் வெங்காயம், உரிக்க உரிக்க ஒன்றுமில்லை. அம்பேத்கர் சிலை சேதத்திற்கு கண்டனம். தலைவர்கள் சிலையை சேதப்படுத்துவது ஈனத்தனமான செயல்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story